ஓம் நம சிவாய!
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே
காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே
பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே
பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பதிகங்கள்
இறைவர் திருப்பெயர்: பட்டிப்பெருமான், பட்டீஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர் : பச்சைநாயகி, மரகதவல்லி.
தல மரம் :
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், காஞ்சிமா நதி.
வழிபட்டோர் : காமதேனு, பட்டி.
வைப்புத்தலப் பாடல்கள் :
சம்பந்தர் - ஆரூர் தில்லையம் (2-039-1);
அப்பர் - சிந்தும் புனற்கெடில (6-07-10),
அஞ்சைக் களத்துள்ளார் (6-51-8), ஆரூர்மூ லத்தானம் (6-70-2);
சுந்தரர் - ஆரூர் அத்தா ஐயாற் (7-47-4), பாரூரும் அரவல்குல் (790-10)
தல வரலாறு
காமதேனுவும், அவள் மகள் 'பட்டி' என்பவளாலும் வழிபடப்பட்ட பதி.
பேரூர் நடராசப் பெருமானைத் தரிசித்த சுந்தரர், தில்லை சென்று
வணங்கியபோது, அப்பெருமான் பேரூர்ப் பெருமானாகவே காட்சி தந்தார் என்பது
வரலாறு.
நடராசர் அம்பலத்தில் எழுந்தருளியுள்ள அம்பலவாணப் பெருமான், கோமுனிக்கும் 'பட்டி'க்கும் ஆனந்த தாண்டவ தரிசனம் அருளிய பெருமானாவார்.
சிறப்புக்கள்
இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
மணிவாசகரின் திருக்கோவையாரிலும் இத்தலம் போற்றப்படுகிறது.
அருணகிரிநாதர் இங்குள்ள முருகனைப் போற்றித் திருப்புகழ் அருளியுள்ளார்.
நொய்யலாற்றின் கரையில் உள்ள தலம்.
இத்தலத்திற்குக் காஞ்சிவாய்ப் பேர், மேலச்சிதம்பரம், இனாம்பேரூர்,
அரசம்பலம் என பெயர்கள் இருந்ததாகத் தெரிகிறது.
தலவரலாறு தொடர்புடையதால் - இத்தலம் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும்
பெருமை வாய்ந்தது.
இங்குள்ள நடராசர் அம்பலம் - நடராச சபை, வேறெங்கும் காண முடியாத
சிற்பக்கலை நுட்பங்கள் வாய்ந்தது. இம்மண்டபம் முழுவதுமே - ஒவ்வொரு
பகுதியும் சிற்பக் கலையழகுடன் மிளிர்கின்றது. இச்சபை நாயக்க மன்னர்கள்
காலத்தில் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு வரலாறு கூறுகிறது.
கோயிலுக்கு எதிரே 16 வளைவுகளைக் கொண்ட திருக்குளம் மற்றும்
இறவாப்பனையும், பிறவாப்புளியும் உள்ளது.
பேரூர் புராணத்தை திருவாவடுதுறை ஆதீனம் கவிராக்ஷ கச்சியப்பமுனிவர்
எழுதியுள்ளார்.
பேரூர்த் தலத்திற்குறிய சிறப்புக்களாக எழும்பு கல்லாதல், இறவாப்பனை,
பிறவாப்புளி, திருநீற்றுமேடு, செம்பு பொன்னாதல், இறக்கும் உயிர்கள் வலச்
செவியை மேல்வைத்து இறத்தல் போன்றச் சிறப்புச் செய்திகள் தலபுராணத்தில்
கூறப்பட்டுள்ளது.
கரிகாற்சோழன் இத்தலத் திருக்கோயிலைக் கட்டினான் என்று சோழர்களின்
பூர்வபட்டயம் கூறுகிறது.
இத்தலம் "பேரூர் நாட்டுக் கோவன்புத்தூர்" என்று கல்வெட்டுக்களில்
குறிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment