Saturday, December 20, 2008

பரஞ்சோதி முனிவர் அருளிய

திருவிளையாடற் புராணம்

(திருவாலவாய் மான்மியம்)

திருச்சிற்றம்பலம்

முதலாவது - மதுரை காண்டம்(பாயிரம் முதல் பதிகப் படலம் வரை)

1. காப்பு
விநாயகர் காப்பு 1.  சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர  முத்தி யான முதலைத் துதிசெயச்  சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ  சித்தி யானைதன் செய்யபொற் பாதமே   சொக்கலிங்கமூர்த்தி காப்பு  2.  வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுணர் உள்ளந் தோறுஞ்  சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்  குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி  மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி   அங்கயற்கண்ணம்மை காப்பு   3.  சுரம்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி       யுத்தரியத் தொடித்தோள் போற்றி  கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்       பால்சுரந்த கலசம் போற்றி  இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட       வங்கயற்கண் எம்பிராட்டி  அரும்புமிள நகைபோற்றி யாரணநூ புரஞ்சிலம்பு       மடிகள் போற்றி    நூற்பயன்   4  திங்களணிதிருவால வாயெம் மண்ண றிருவிளையாட்       டிவையன்பு செய்துகேட்போர்  சங்கநிதி பதுமநிதிச் செல்வ மோங்கித்       தகைமை தரு மகப்பெறுவர் பகையை வெல்வர்  மங்கலநன் மணம்பெறுவர் பிணிவந் தெய்தார்       வாழ்நாளு நனிபெறுவர் வானா டெய்திப்  புங்கவராய் அங்குள்ள போக மூழ்கிப்       புண்ணியராய்ச் சிவனடிக்கீழ் நண்ணி வாழ்வார்   வாழ்த்து   5.    மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம்  பல்குக வளங்கள் எங்கும் பரவுக வறங்க ளின்ப  நல்குக வுயிர்கட் கெல்லா நான்மறைச் சைவ மோங்கிப்  புல்குக வுலக மெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க   கடவுள் வாழ்த்து   பரமசிவம்   6   பூவண்ணம் பூவின் மணம்போலமெய்ப் போத வின்ப  மாவண்ண மெய்கொண் டவன்றன்வலி யாணை தாங்கி  மூவண்ண றன்சந் நிதிமுத்தொழில் செய்ய வாளா  மேவண்ண லன்னான் விளையாட்டின் வினையை வெல்வாம்   பராசக்தி   7  அண்டங்கள் எல்லாம் அணுவாக வணுக்க ளெல்லாம்  அண்டங்க ளாகப் பெரிதாய்ச்சிறி தாயி னானும்  அண்டங்க ளுள்ளும் புறம்புங்கரி யாயி னானும்  அண்டங்க ளீன்றா டுணையென்ப ரறிந்த நல்லோர்   சொக்கலிங்கமூர்த்தி   8  பூவி னாயகன் பூமக ணாயகன்  காவி னாயக னாதிக் கடவுளர்க்கு  ஆவி நாயகன் னங்கயற் கண்ணிமா  தேவி நாயகன் சேவடி யேத்துவாம்   அங்கயற்கண்ணம்மை   9  பங்கயற்க ணரியபாம் பரனுருவே தனக்குரிய படிவமாகி  இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த சராசரங்கள் ஈன்றுந் தாழாக்  கொங்கயற்கண் மலர்க்கூந்தற் குமரிபாண்டியன்மகள் போற் கோலங் கொண்ட  அங்கயற்க ணம்மையிரு பாதப்போ தெப்போது மகத்துள் வைப்பாம்   நடேசர்   10  உண்மையறி வானந்த வுருவாகி வெவ்வுயிர்க்கு முயிராய் நீரின்  தண்மையனல் வெம்மையெனத் தனையகலா திருந்துசரா சரங்க ளீன்ற  பெண்மையுரு வாகியதன் னாநந்தக் கொடிமகிழ்ச்சி பெருக யார்க்கும்  அண்மையதா யம்பலத்து ளாடியருள் பேரொளியை யகத்துள் வைப்பாம்   சௌந்தரபாண்டியர்   11  சடைமறைத்துக் கதிர்மகுடந் தரித்துநறுங் கொன்றையந்தார் தணந்துவேப்பந்  தொடைமுடித்து விடநாகக் கலனகற்றி மாணிக்கச் சுடர்ப்பூ ணேந்தி  விடைநிறுத்திக் கயலெடுத்து வழுதிமரு மகனாகி மீன நோக்கின்  மடவாலை மணந்துலக முழுதாண்ட சுந்தரனை வணக்கஞ் செய்வாம்   தடாதகைப் பிராட்டியார்   12  செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து செங்கோ லோச்சி  முழுதுலகுஞ் சயங்கொண்டு திறைகொண்டுந்திகண முனைப்போர் சாய்த்துத்  தொழுகணவற் கணிமணமா லிகைசூட்டித் தன்மகுடஞ் சூட்டிச் செல்வந்  தழைவுறுதன் னரசளித்த பெண்ணரசி யடிக்கமலந் தலைமேல் வைப்பாம்   கான் மாறி நடித்தவர்   13  பொருமாறிற் கிளர்தடந்தோள் ஒருமாறன் மனங்கிடந்த புழுக்க மாற  வருமாறிற் கண்ணருவி மாறாது களிப்படைய மண்ணும் விண்ணும்  உருமாறிப் பவக்கடல்வீழ்ந் தூசலெனத் தடுமாறி யுழலு மாக்கள்  கருமாறிக் கதியடையக் கான்மாறி நடித்தவரைக் கருத்துள் வைப்பாம்    தஷிணாமூர்த்தி  14 கல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்ற கேள்வி  வல்லார்க ணால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்  எல்லாமாய் அல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்து காட்டிச்  சொல்லாமற்சொன் னவரை நினையாமனினைந் துபவத் தொடக்கை வெல்வாம்   சித்தி விநாயகக் கடவுள்   15 உள்ளமெனுங் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி யறுதியாகத்  தள்ளரிய வன்பென்னுந் தொடர்பூட்டி யிடைப் படுத்தித் தறுகட் பாசக்  கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணையென்னும்  வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைந்து வருவினைக டீர்ப்பாம்   சுப்பிரமணியக் கடவுள்   16 கறங்குதிரைக் கருங்கடலுங் காரவுணப் பெருங்       கடலுங் கலங்கக் கார்வந்  துறங்குசிகைப் பொருப்புஞ்சூ ருரப்பொருப்பும்       பிளப்பமறை யுணர்ந்தோராற்றும்  அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலும் மூள  மறங்குலவு வேலெடுத்த குமரவேள் சேவடிகள் வணக்கம் செய்வாம்   சரசுவதி  17 பழுதகன்ற நால்வகைச் சொன் மலரெடுத்துப்        பத்திபடப் பரப்பித் திக்கு  முழுதகன்று மணந்துசுவை யொழுகியணி பெற        முக்கண் மூர்த்தி தாளிற் றொழுதகன்ற வன்பெனுநார் தொடுத்தலங்கல்        சூட்டவரிச் சுரும்புந் தேனும்  கொழுதகன்ற வெண்டோட்டு முண்டகத் தாளடி        முடி மேற்கொண்டு வாழ்வாம்    திருநந்தி தேவர்   18  வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுட கோடி  பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையாற் றாக்கி  அந்தியும் பகலும் தொண்ட ரலகிடுங் குப்பை யாக்கும்  நந்தியெம் பெருமான் பாத நகைமலர் முடிமேல் வைப்பாம்   திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார்   19  கடியவிழ் கடுக்கை வேணித் தாதைபோற் கனற்கண் மீனக்  கொடியனை வேவ நோக்கிக் குறையிரந் தனையான் கற்பிற்  பிடியன நாயனார் வேண்டப் பின்னுயி ரளித்துக் காத்த  முடியணி மாடக் காழி முனிவனை வணக்கஞ் செய்வாம்   திருநாவுக்கரசு நாயனார்  20  அறப்பெருங் செல்வி பாகத் தண்ணலஞ் செழுத்தா லஞ்சா  மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சகர் இட்டநீல  நிறப்பெருங் கடலும் யார்க்கும் நீந்துதற் கரிய வேழு  பிறப்பெனுங் கடலு நீத்த பிரானடி வணக்கஞ் செய்வாம்   சுந்தர மூர்த்தி நாயனார்   21  அரவக லல்கு லார்பா லாசைநீத் தவர்க்கே வீடு  தருவமென் றளவில் வேதஞ் சாற்றிய தலைவன் றன்னைப்  பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்  இரவினிற் றூது கொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்   மாணிக்கவாசக சுவாமிகள்   22  எழுதரு மறைக டேறா விறைவனை யெல்லிற் கங்குற்  பொழுதறு காலத் தென்றும் பூசனை விடாது செய்து  தொழுதகை தலைமே லேறத் துளும்புகண் ணீருண் மூழ்கி  அழுதடி யடைந்த வன்பன் அடியவர்க் கடிமை செய்வாம்   சண்டேசுர நாயனார் முதலிய திருத்தொண்டர்   23  தந்தைதா ளடும்பிறவித் தாளெறிந்து       நிருத்தர்இரு தாளைச் சேர்ந்த  மைந்தர்தாள் வேதநெறி சைவநெறி பத்திநெறி       வழாது வாய்மெய்  சிந்தைதா னரனடிக்கே செலுத்தினராய்ச்       சிவானுபவச் செல்வ ராகிப்  பந்தமாந் தொடக்கறுத்த திருத்தொண்டர்       தாள்பரவிப் பணிதல் செய்வாம்    கடவுள் வாழ்த்து சுபம்  

No comments:

Post a Comment